பிரம்டனில் இன்று காலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Williams Parkway மற்றும் Main Street North பகுதியில், Clipstone Courtஇல் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை 12.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 20 வயது மதிக்கத்தக்க குறித்த அந்த ஆண், வீட்டின் வாகன நிறுத்தும் இடத்தில் நின்றிருந்த வேளையில், அங்கு முகமூடி அணிந்தவாறு, கருமை நிற ஆடைகளுடன் வந்த ஒருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
அவர் மீது பலமுறை சுடப்பட்டுள்ளதாகவும், உயிராபத்தான நிலையில் காணப்பட்ட அவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சந்தேக நபர் குறித்த விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.