இந்திய பிரதமரை கொலைச் செய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக கூறி மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர் ராவ், இடதுசாரி சிந்தனையாளரும் வக்கீலுமான சுதா பரத்வாஜ், வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோர் மகாராஷ்டிர காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சட்டவிரோதமாக தாங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக 5 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.