கனடாவுக்கு நன்மை பயக்குமானால் NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில் கனடா கைச்சாத்திடும் என்று பி்ரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவின் உயர் வர்த்தக பேச்சுவார்த்தையாளர் அவரது மெக்ஸிகன் மற்றும் அமெரிக்க பேச்சுவார்த்தை பிரதானிகளுடன் வொஷிங்டனில் நேற்று சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த ஒப்பந்தம் இன்னும் ஒரு வார காலத்தில் நிறைவு செய்யப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனினும் வர்த்தக உடன்படிக்கையில் உள்ள புதிய விதிமுறைகள் தொடர்பாக கனடா அதிக அழுத்தங்களுக்கு உட்படுள்ளதுடன், சர்ச்சைக்கான தீர்வு, அறிவுசார் சொத்துரிமை விதிமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் கடந்த திங்கட்கிழமை NAFTA உடன்படிக்கைக்கு இணங்கிய பின்னர் கனடா இந்த நெருக்கடி நிலைக்கு உள்ளாக்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் மறு பேச்சுவார்த்தைக்கு கனடா வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளது என்று கியூபெக்குக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
எனினும் கனடாவுக்கு நீண்ட கால நன்மையையும், நடுத்தர வர்க்கத்தினருக்கு அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்குமானால் மாத்திரமே வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.