ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து குறித்த ஆலையை ஆய்வு செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு இந்த மேல் முறையீட்டை மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசு சமர்ப்பித்துள்ள அந்த மேல்முறையீட்டு மனுவில், இது போன்ற விசாரணை ஆணையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் குறித்த இந்த மேன் முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.