கிளிநொச்சியில் யுவதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த கோரியும் முல்லைத்தீவில் முழுமையான கதவடைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கதவடைப்பு இன்று முறுகண்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறுகண்டிப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய கருப்பையா நித்தியகலா பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் பூதவுடல் இன்றையநாள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் படுகொலையை கண்டித்து முழுமையான கதவடைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.