முப்பது ஆண்டுகால போர் முடிவுக்கு கொண்டு வந்த பின்னரே வடக்கு கிழக்கில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியாவிற்கு நீதி கோரி நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அக்காலப்பகுதியில் வீதியில் தைரியமாக சென்று வந்த பெண்களுக்கு, இன்று
வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டியது இந்த நல்லாட்சி அரசாங்கத்தினுடைய தலையாய கடமையாகும் எனவும் சாந்தி சிறீஸ்கந்தராசா மேலும் தெரிவித்துள்ளார்.