வவுனியா வடக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக மண்ணான வெடுக்குநாறி மலையில் ஆலயம் அமைத்து வழிபடமுடியாதென தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேவையாயின் வெடுக்குநாறிமலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பால் ஆலயம் அமைத்து வழிபடமுடியும் என்று தொல்லியல் திணைக்களம் அறியத்தந்திருப்பதாக நெடுங்கேணியில் உள்ள காவல்துறையினர் ஆலய அறங்காவலர் சபைக்கு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக வெடுக்குநாறி மலைக்கு தமிழ் மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்ததை அடுத்து மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், அங்கே கட்டுமானப்பணிகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும், ஆனால் வழிபாட்டில் ஈடுபடை தடையில்லையெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது வெடுக்குநாறிமலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பால் ஆலயம் அமைத்து வழிபடமுடியும் என்று தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது.