NAFTA எனப்படும் வடஅமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மீள் பேச்சுவார்த்தைக்கு கனடாவை இணைக்கும் செயற்பாட்டில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரீலான்ட், அமெரிக்க பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தில் கனடாவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரலான்ட், இன்று இப்பேச்சுவார்த்தையை தொடரப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி ரொபர்ட் லைதிசருடன் கடந்த நான்கு நாட்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கனேடிய வெளிவிவகார அமைச்சர் எவ்வித பலனுமின்றி பேச்சுவார்த்தையினை நிறைவு செய்திருந்தார்.
இந்த நிலையில் 1.2 த்ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இருதரப்பு வர்த்தகத்தினை மெக்சிகோவுடன் மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு நஃப்டாவில் கனடாவின் அங்கத்துவத்தை நீடிக்கும் முயற்சியில் ஃபிரீலான்ட் ஈடுபட்டுள்ளார்.