பெல்ஜியத்தை சேர்ந்த பெண் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
28 வயதான அமிலி கிறிஸ்டிலி சகலீஸ் என்ற பெண், பெல்ஜியத்திலிருந்து கனடாவுக்கு வந்த நிலையில் கடந்த மாதம் 22ஆம் நாள் வான்கூவருக்கு செல்ல முயன்றுள்ளார்.
அன்று இரவு போஸ்டன் இரவு நேர களியாட்ட விடுதிக்கு அருகில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு உடனடியாக காவல்துறையினர் விரைந்திருந்தனர்.
இதன்போது அங்கு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதனை அவதானித்த அதிகாரிகள், கொலையுண்டவர் குறித்த அந்த பெல்ஜிய நாட்டு பெண் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்த காவல்துறையினர் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.