இலங்கையில் காணாமற்போனோர் தொடர்பில் எந்ததொரு முறையான தகவலும் இதுவரையும் இல்லை என்று காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
போர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் கலவரம் ஆகியவற்றின் காரணமாக அதிகளவான மக்கள் உயிரிழந்தனர்.
இலங்கையில் செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையின்படி 21 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் எனவும், பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் படி 16 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் என்றும், இவ்வாறு வேறுபட்ட தகவல் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் மற்றும் காவல்துறை ஆகியவற்றில் காணாமற்போனோர் எண்ணிக்கை 5100 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது எனவும், இவ்வாறு காணாமற்போனோர் தொடர்பில் இன்னும் சரியான தகவல்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.