அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகளில் கடுமையான புயல் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்ந நாட்டு வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கமைய நாளை திங்ட்கிழமை இந்த புயல் தாக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் பல்வேறு பகுதியில் அண்மை காலமாக அதிக அளவில் நில நடுக்கங்களும், சூறாவளி தாக்கங்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.