ரொரன்ரோ Riverdale பகுதியில் தடப் பேரூந்து ஒன்றினால் மோதுண்ட பெண் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Broadview Avenueவுக்கு அருகே, Queen street மற்றும் Grant street பகுதியில் இன்று காலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அந்த பெண் பாதசாரிப் பெண் உயிராபத்தான நிலையில் ரொரன்ரோ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதனை ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படு்ததியுள்ளார்.
அவரின் தற்போதய உடல் நிலை குறித்த தகவல்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகினறனர்.