இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைப்பதாக தமிழக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்தி மட்டுமன்றி, அப்பாவி மக்களும் கொல்லப்பட காரணமானவர்கள் என்று இந்திய உயர் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட விடயத்தில் இந்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் அரசியல் செய்து வருவதாக அந்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மத்திய அரசாங்கமும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கமும் இந்த விடயத்தில் மென்மையான அணுகுமுறையை கடைபிடித்துவருவதாக அகில இந்திய காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.