போர் குற்றச்சாட்டுக்களில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினரை விடுவிக்குமாறு இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுக்கவுள்ள கோரிக்கையை ஐக்கிய நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று லங்கா சமசமாஜக் கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்த காலமாக இலங்கையில் இடம்பெற்ற போருக்கும், மனிதப்படுகொலைகளுக்கும் முழுமையாக இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது எனவும், எனவே இராணுவ வீரர்கள் மீதான போர்க்குற்றசாட்டுக்களை நீக்குமாறு சனாதிபதி கோரவுள்ளதாக தெரிவித்துள்ளமை வரவேற்க்கத்தக்கதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இராணுவத்தை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறு கோரவுள்ளதாக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.