சிரியாவின் இட்லிப் மாகாணம் இரத்தக்களரியாக மாற அனுமதிக்க கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருவதுடன், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசும், ரஷ்யாவும் கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் குறித்த பகுதியில் சிக்கியுள்ள மக்களின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஐ. நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குற்றோரஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் இட்லிப் மாகாணத்தில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது எனவும், ஏராளமான பொதுமக்கள் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்றும், சிக்கிக் கொண்டுள்ள மக்களை அப்பகுதியிலிருந்து மீட்க வேண்டும் எனவும், இட்லிப் மாகாணம் ரத்தக்களரியாக மாற அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் பொதுமக்கள் உயிர் விலையாக்கப்படாமல் ரஷ்யாவும், ஈரானும் வழி தேட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.