அமெரிக்காவின் கலிபோர்னியாவை தாக்கிய புளொரன்ஸ் புயலின் சீற்றத்தினால் வட கரோலினா மற்றும் தென் கரோலினா ஆகிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
வட கரோலினாவில் நேற்று வியாழக்கிழமை மாலை மணித்தியாலத்துக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய புயல் காற்றினால் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பலத்த மழை, கடுமையான காற்று என்பன தொடர்வதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வடக்கு மற்றும் தென் கரோலினாவில் சுமார் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
வானிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கைக்கு அமைய 1.7 மில்லியன் வரையான மக்கள் குறித்த பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
அத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இரவு பாதுகாப்பாக தற்காலிகமான குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.