பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய அதிதீவிர மாங்குட் சூறாவளி சீனாவின் மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்ததுடன் அங்கு கடும் சேதத்தை விளைவித்து வருகிறது.
அந்த மாகாணத்தில் சுமார் 162 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகிறது.
சீனாவின் தெற்கு கடலோர நகரமான ஜியாங்மென்னுக்கு அருகே மாங்குட் சூறாவளி உள்ளூர் நேரப்படி மதிய வேளையில் கரையை கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக குவாங்டாங் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதுடன், அங்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் தொடர்ந்து வீசி வரும் அதிவேக காற்று மற்றும் கனமழையின் காரணமாக அங்குள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், 800க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை/ புறப்பாடு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டின் வலிமைமிக்க புயலாக மாங்குட் சூறாவளி கருதப்படுகிறது.