சாஸ்காச்சுவானில் காணாமல் போன நிலையில், அதிகாரிகளால் தேடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்த 6 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Battleford பகுதியின் வடக்கே ஒரு குடும்பத்தாரின் கார் ஒன்று நேற்று மாலை 5 மணியளவில் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், அந்தக் காரின் பின் இருக்கையில் இருந்த குறித்த இந்தச் சிறுமியும் சேர்த்துக் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
அங்குள்ள வர்த்தக வளாகம் ஒன்றிலிருந்து குறித்த இந்த சிறுமியுடன் கார் கடத்திச் செல்லப்பட்டு சுமார் 12 மணி நேரங்களின் பின்னர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சிறுமி தற்போது மருத்துவ பராமரிப்பின் கீழ் உள்ளதாக கூறப்பட்டுள்ளதைத் தவிர, சிறுமி குறித்த மேலதிக விபரங்கள் எவையும் தற்பேதைக்கு அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.