ஆப்கான் – இந்தியா இருதரப்பு உறவு மற்றும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று புதன்கிழமை புதுடெல்லி விமானம் நிலையம் சென்றடைந்துள்ள அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடாத்தவுள்ளார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், பிராந்தியப் பாதுகாப்பு, தலிபான்களுடனான பேச்சுவார்த்தை, ஆப்கனில் உள்கட்டமைப்புகளில் இந்தியாவின் பங்கு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.