முஸ்லிம் ஆண்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டத்துக்கு இந்திய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
முத்தலாக் தொடர்பான சட்ட மூலம் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
முஸ்லிம் ஆண்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அது தொடர்பான சட்டமூலம் மக்கள் அவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
எனினும் அந்த சட்டமூலம் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இது தொடர்பிலான அவரச சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
முத்தலாக் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து கொண்டு வரப்பட்டுள்ள அந்த அவசரச் சட்டத்துக்கே இந்திய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.