வடகொரியா அணுவாயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேரப்பேச்சுகள் 2021ஆம் ஆண்டு சனவரி மாதத்திற்குள் நிறைவுபெறும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகளின் தலைவர்களும், உச்சநிலைச் சந்திப்பின் 2ஆம் நாள் பேச்சுகளை முடித்துக்கொண்ட சில மணி நேரத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் நியூயோர்க் வருமாறு வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரி யொங்ஹொவுக்குத் தாம் அழைப்புவிடுத்திருப்பதாகவும் பொம்பேயோ தெரிவித்து்ளளார்.
வடகொரியாவுடனான உறவுகளை மேம்படுத்திக்கொள்ள, உடனடியாகப் பேரப்பேச்சுகளைத் தொடங்க வோஷிங்டன் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.