அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்துள்ள அவர், எந்த வகையிலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிராக அனைத்துலக தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, எமது சந்ததியினருக்கு சிறந்த உலகை உருவாக்குவோம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.