இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அனைத்துலக சூரிய சக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழிநடத்துவதற்காகவும், எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு குறித்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தவிர, பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உள்பட 5 பேருக்கும், ஒரு தனியார் அமைப்புக்கும் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை சூரியசக்தியால் இயங்கும் உலகின் முதல் அனைத்துலக வானூர்தி நிலையம், இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வானூர்தி நிலையத்துக்கும் சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்பட்டுள்ளது.