இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், யப்பானிய மற்றும் சிரிய வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்துள்ளார்.
அவர்கள் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்புக்களின் போது, எதிர்கால செயற்பாடுகள் மற்றும் குறித்த நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது ஆகிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
யப்பானியப் வெளிவிவகார அமைச்சருடான சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் யப்பானிய பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் பேசியுள்ளனர்.