இந்தோனேசியாவின் பாலு நகரத்தில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமியும் தாக்கியுள்ளது.
நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து இந்தோனேசிய நாட்டின் சுலவேசி தீவில் உள்ள பாலு என்ற அந்த நகரம் 6.6 அடி உயர அலைகளின் ஆவேசத்துக்கு இலக்கானதாகவும் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் வலம் வரும் காணொளி ஒன்றில் சுனாமி அலைகளைப் பார்த்து மக்கள் சத்தமிட்டவாறு அச்சத்தில் ஓடுவதும், சேதமடையும் கட்டங்களுக்கு மத்தியில்
மசூதி ஒன்று இடிந்துவிழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்ற போதிலும், அவை இந்த அனர்த்தங்களின் தாக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்களா என்பது தொடர்பில் விபரங்கள் வெளியிடவில்லை.
அத்துடன் இந்த சேதங்கள் உயிரிழப்புக்கள் தொடர்பான விபரங்கள் உத்தியோக பூர்வமான இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த மாதம் இந்தோனேசியாவின் லாம்போக் தீவை தொடர் நிலநடுக்கங்கள்
தாக்கியத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.