ஈழத் தமிழர் பிரச்சினைகள் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் துரோகம் இழைத்திருப்பதாக, இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இறுதி போர்க் காலப்பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது எனவும், அந்தக் காலப்பகுதியில் போர் தவிர்ப்பை வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவர் கருணாநிதி மேற்கொண்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம், தமிழ் மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தியது என்றும் ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது திராவிட முன்னெற்றக் கழக்கம் சிறிது நேர உண்ணா விரத நாடகத்தை அரங்கேற்றி இருந்தது எனவும், இந்த நிலையில் காங்கிரசுடன் இணைந்து செயற்படும் முனைப்பிலேயே திராவிட முன்னெடுக்க கழகம்
இயங்கி வருகின்றது எனவும், தமிழின படுகொலைக்கு காரணமான காங்கிரஸூடன் எவரும் இணைய மாட்டார்கள் என்றும் இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் மானமுள்ள எவரும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் இந்திய மத்திய இணை அமைச்சர் இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.