போர் வெற்றியை உரிமை கோரும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போர் குற்றச்சாட்டின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகளுடன் இடம்பெற்ற இறுதி போரில் கடைசி இரண்டு வாரங்களில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக்காக ஆகியோர் இருக்கவில்லை எனவும், தானே போரை வெற்றிக் கொண்டதாகவும் மைத்திரிபால சிறிசேன தற்போது கூறி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு சனாதிபதி போர் வெற்றியை தனதென உரிமை கோருவதை போன்று, போர்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் ஆகியவற்றுக்கான பொறுப்பையும் மைத்திரி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
அத்துடன் இராணுவத்தையும் போர் குற்றத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையையும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.