தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கிழக்கு பலக்லைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போர் முடிவடைந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் அடைத்து வைக்காமல் உடனடியாக விடுதலை செய்யுமாறு இதன் போது அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்கு பலக்லைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்னால், நிறுவக மாணவர்கள் இன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போர் முடிவடைந்த நிலையில் எம்மவர் குற்றவாளியா, அப்பாவி தமிழரை சிறையில் வாடச் செய்வதா நல்லாட்சி, பயங்கரவாத தடைச் சட்டம் தமிழருக்கு எதிரான அடக்குமுறையா? போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இந்துஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.