ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் பயங்கரவாதிகள் இன்று நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பரப்புரை பேரணி மீது குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு எதிர்வரும் 20ஆம் நாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.