இலங்கை – இந்திய கூட்டுச் சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்டினன்ட் கேணல் குமரப்பா, லெப்டிபனன்ட் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த இவர்களை, கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு இலங்கை – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் நாள் அன்று சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்தனர்.
யாழ். மாவட்ட தளபதி லெப்டிபனன்ட் கேணல் குமரப்பா, திருமலை மாவட்ட தளபதி லெப்டினன்ட் கேணல் புலேந்திரன், மேஜர் அப்துல்லா, கப்டன் பழனி, கப்டன் கரன், கப்டன் மிரேஸ், கப்டன் நளன், லெப்டினன்ட் அன்பழகன், லெப்டினன்ட் தவக்குமார், 2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட், 2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் ஆகியோர் இதன்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, மறுநாள் ஒக்டோபர் 6ஆம் நாள் அன்று கப்டன் ரகுவப்பா வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.