அமெரிக்க மாநிலமான ஃபுளோரிடாவை மைக்கல் சூறாவளி இன்று தாக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு அல்லது புதன்கிழமை சூறாவளி மேலும் வலுவாகும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 வட்டாரங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி காரணமாகக் கடலோரத்தில் வசிப்போர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வரலாம் என்றும் அவசர நிலையை அறித்துள்ள மாநில ஆளுநர் ரிக் ஸ்காட் எச்சரித்துள்ளார்.