இந்திய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸ நாட்டிற்கு 3 நாட்கள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்கள் கொள்வனவு செய்வது தொடர்பான விவகாரம் உள்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் இந்த பயணத்தின் போது 2015-ம் ஆண்டு 36 ரபேல் போர்விமானங்கள் வாங்குவதற்காக பிரதமர் மோடி கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் அந்த நாட்டு அரசுடன் அவர் பேச்சு நடாத்துவார் என்று இந்திய பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் அங்கு அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லியை சந்தித்து பரபஸ்பரம் இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அலோசிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி அரசு ஆட்சியைப் பொறுப்பேற்றதுடன், ரபேல் போர் விமானங்கள் கொள்வனவு செய்வது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றையும் பிரான்ஸ் அரசுடன் மேற்கொண்டுள்ளது.
ஆனால் இந்த விமானக் கொள்வனவில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக எதிர்கட்சியான காங்கிரஸ் ஆளும் பாரதிய ஜனதாக் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டி வருகின்றது.