அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி ஒருவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.
இராசாபல்லவன் தபோரூபன் என்ற அரசியல் கைதியே, உடல் நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகளாக சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி யெஜச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் உள்ளிட்ட 10 கைதிகள் அனுராதபுர சிறையில் உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக கொழும்பு மகசின் மற்றும் கண்டி சிறைச்சாலைகளில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.