அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்த இரண்டு விண்வெளி வீரர்களும் பத்திரமாக தரையிறங்கியுள்ளனர்.
‘சோயுஸ்’ என்ற அந்த விண்கலத்தில் இருந்து அவசரமாக வெளியேறிய அந்த விண்வெளி வீரர்கள் இருவரும் பிரத்தியேக ஆபத்துக்கால வாகனம் மூலம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த விண்கலத்தில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகியோர் பயணம் செய்தனர்.
கஜகஸ்தானின் பைக்கானோர் காஸ்மோட்ராமில் இருந்து இந்த விண்கலம் புறப்பட்ட 90 விநாடிகளுக்குப் பிறகு, அதில் கோளாறு இருப்பதை உள்ளே இருந்த விண்வெளி வீரர்கள் உணர்ந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ஆறு மணி நேரத்திற்குள் அவர்கள் அந்த ஆபத்துக்கால வாகனம் மூலம் தரையிறங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஒட்டுமொத்த சூழ்நிலையும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரையில், மனிதர்களை இட்டுச் செல்லும் விண்வெளிப் பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக ரஷ்யத் துணைப் பிரதமர் போரிசோவ் அறிவித்துள்ளார்.