ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்க்காக நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில், 188 வாக்குகளை பெற்றுள்ள இந்தியா தேர்வாகியுள்ளது.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் 3 ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையில் உறுப்பினராக இந்தியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தியாவுடன் சேர்த்து பசிபிக் பிராந்தியத்திற்கென பக்ரைன், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ் மற்றும் பிஜி நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளன.