முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான பரிதி இளம்வழுதி உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
அவரின் மறைவிற்கு தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கலை வெளியிட்டுள்ளனர்.
பரிதி இளம்வழுதி தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கிய அவர் பின்னர், 2013-ம் ஆண்டு அதில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர் செல்வத்தின் அணியிலும் அவர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அவர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.