ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் நாள் முதல் மார்ச் மாதம் 22 ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில், அதன் போது இலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணையை கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரித்தானியா இந்த பிரேரணையை கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கான இராஜதந்திர முயற்சிகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரித்தானியா இந்த பிரேரணையை கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக ஜேர்மனி இலங்கை குறித்த பிரேரணையை கொண்டு வருவதில் முன்னின்று செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் ஜேர்மனி எந்த விடயத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை.
குறிப்பாக இவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரித்தானியா, இலங்கை குறித்த பிரேரணையை கொண்டுவரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றநிலையில், இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் மாதங்களில் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.