வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இரண்டு நாடுகளின் எல்லைக் கிராமமான பென்முன்ஜொம்மில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சோ மியோங் கியொங், வடகொரிய சமாதான மற்றும் மீள் ஒன்றிணைப்புக் குழுவின் தலைவர் றீசொன் குவொன் உட்பட மேலும் சில இரண்டு நாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த சந்திப்பானது மூன்றாவது கொரிய தீபகற்ப மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும் முகமாகவே இடம்பெற்றுள்ளதாக தென் கொரிய அமைச்சர் சோ மியோங் கியொங் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு பொருளாதார நடவடிக்கைகள், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடரூந்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து, சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்பன தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் தீர்மானங்களை மேற் கொண்டுள்ளன.
கடந்த மாதம் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னிற்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானங்கள் மேற் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.