தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் 400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று ஊடகவியலாளருக்கு இது தொடர்பில் விளக்கமளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், இந்தியா- பிரான்சு இடையேயான உறவில் எந்த தொய்வும் இல்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன் பிரான்சிடம் இந்தியா வலுவான உறவை கொண்டுள்ளதுடன், இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்று என்றும் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.
இந்திய மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் பிரான்ஸ் நாட்டுடன் மேற்கொண்ட ரஃபேல் போர் விமான கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுளதாக எதிர்கட்சியான காங்கிரஸ் கடுமையாகக் குற்றஞ்சாட்டி வருகிற நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சு இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.