தமிழ் மக்கள் விக்கினேஸ்வரனின் தலைமையை எதிர்பார்த்து காத்திருப்பதாக, முதலமைச்சரின் எதிர்கால அரசியல் அறிவிப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சின்ம மிசன் சுவாமி அவர்கள் தமது ஆசி செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதேபோல சட்டத்தால் வடகிழக்கு பிரித்து வைக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் என்றென்றும் இணைந்தே இருப்பதாகவும், அவ்வகையில் முதல் அமைச்சர் தலைமையில் உருவாகப் போகும் புதிய அரசியல் மாற்றம் நிச்சயம் வட கிழக்கு வேறுபாட்டை இல்லாதொழிக்குமெனவும் தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவர் வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாமனிதர் தராகி சிவராம் சொல்லி வந்தது போன்று எமது பாதை உலகெங்கும் போராடும் மக்களிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென சட்டத்தரணி குருபரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் நல்லூர் பொது கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அவர் தமிழ் மக்கள் பேரவை மாற்று அரசியலுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.