நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் பிரதமராக சத்தியப் பிரமானம் செய்துள்ளார். மைத்திரிபால சிறிசேன முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதியேற்றபோது அங்கு நல்லாட்சியில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது. குறித்த அறிவிப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார். மேலும் விலகுவது குறித்த கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இதேவேளை ஐனாதிபதியால் தன்னை பதவி நீக்க முடியாது என்றும் இயலுமாயின் நாடாளுமன்றத்தைக்கூட்டி பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டட்டும் என சவால் விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. காலியிலிருந்து அலரி மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அப்போது அவர் பின்னால் குழுமியிருந்த ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெயவேவா ஜெயவேவா என்று கோசம் எழுப்பியதைக்காணக்கூடியதாக இருந்தது.
இதனிடையே ரணில் விக்கிரமசிங்க தனது கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவருடன் 50 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூழ்ந்து நிற்க கருத்து தெரிவித்தார். சட்டத்திற்கு முரணான பதவியேற்பு எனவும், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிருபிப்பதாகவும் ரணில் சவால் விடுத்துள்ளார்.