மெக்சிகோவின் மேற்குப் பகுதி மாநிலமான ஹலிஸ்கோவிலிருக்கும் திடலில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 19 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
4 மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட அவர்களுள் 16 சடலங்கள் ஆண்களுடையது என்றும், 3 சடலங்கள் பெண்களுடையவை என்றும் நம்பப்படுகிறது.
இவை தவிர மேலும் இரு மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடைய கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதன் காரணமாக அவ்வப்போது இதுபோன்ற புதைக்கப்பட்ட சடலங்கள் அதிக எண்ணிக்கையில் அங்கு கண்டுபிடிக்கப்படுகின்றன.
காணாமல்போனோர் பட்டியலையும், சடலங்களையும் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதிலிருந்து2007ஆம் இலிருந்து அத்தகைய சுமார் 4,000 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது.