18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தினகரன் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.
தினகரனு்ககு ஆதரவான 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யபட்ட வழக்கின் தீர்ப்பில், அவர்களை பதவி நீக்கம் செய்து நாடாளுமன்ற சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லுபடி ஆகும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் கூடி சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா, அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா என்பது தொடர்பில் ஆலோசானை நடாத்தியிருந்தனர்.
இதன்போதே குறித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும மேன்முறையீடு செய்வதென்று ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.