தஞ்சக் கோரிக்கையை முன்வைக்கும் குடியேறிகளுக்கு தற்காலிக பணி அனுமதி வழங்கும் திட்டம் ஒன்றை மெக்சிக்கோ அறிவித்துள்ளது.
மெக்ஸிகோ அறிவித்துள்ள இந்த திட்டத்தில், குடியேறிகளுக்கு தற்காலிக அடையாள அட்டைகள், மருத்துவ பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கு கல்வி சேவைகள் என்பனவும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சேவைகளை பெற குடியேறிகள் மெக்ஸிகோவின் சியாபஸ் மற்றும் வஹாக மாநிலங்களில் தங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மெக்சிக்கோ வழியாக அமெரிக்கா நோக்கி பெருமளவு குடியேறிகள் செல்லும் நிலையில் அதனைத் தடுப்பதற்கு அமெரிக்கா கடுமையான முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் மெக்சிக்கோ இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.
குடியேறிகளை நாட்டிற்குள் நுழையாமல் தடுப்பதற்கு அமெரிக்க மெக்சிகோ எல்லையில் 800 படை துருப்புகளை அனுப்பப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது.
தேசிய அளவிலான இந்த அவசர நிலைக்கு இராணுவத்தை அழைக்கவுள்ளதாக இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது கீச்சகப் பதிவில் தெரிவித்து்ள்ளார்.