இந்தோனேசியாவின் வானூர்தி ஒன்று கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதற்கு அந்த வானூர்தியின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாரே காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
போயிங் 737 மேக்ஸ் 8′ வகையைச் சேர்ந்த அந்த வானூர்தி 189 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வேளை கடலில் வீழ்ந்துள்ளது.
ஜகார்தாவிலிருந்து புறப்பட்ட அந்த வானூர்தியில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்கும் அறிகுறிகள் தெரியவில்லை என்று கூறப்படுகின்றது.
அதேவேளை ஜாவா கடலில் மொத்தம் 50 முக்குளிப்பாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை குறைந்தது 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசியத் தேடல் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
விமானத்தின் சிதைந்த பாகங்கள், பயணிகளின் உடைமைகள் என்று 14 பைகள் நிரம்பிய பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன.
விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டி, குரல் பதிவுப் பெட்டி ஆகியவற்றையும் மீட்புப் பணியாளர்கள் தேடிவருகின்றனர்.
மீட்பு நடவடிக்கை தொடரும் நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.