தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலம் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக கடந்த 23 ஆம் நாள் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பொன்றில் நிபந்தனைகளுடன் பட்டாசு தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் அனுமதி வழங்கியது.
அதன்படி தீபாவளி நாளில் இரவு 8 மணி முதல் 10 மணி வரையுள்ள 2 மணி நேரத்தினுள் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்த பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாற்றுவதற்கான கோரிக்கை ஒன்றை முன்வைத்து தமிழ அரசு நீதிமன்றத்தில் மனத்தாக்கல் செய்தது.
தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் , இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் அந்த நேரத்தை தமிழக அரசே தீர்மானித்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.