நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2011ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.
ஆனால் அதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில், நியூட்ரினோ திட்டம் தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று வெள்ளிக்கிழமை நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளை நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அரசு அளித்த அனுமதிக்கு தடைவிதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டதுடன், மத்திய அரசு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.