யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் அவர்கள் 01-11-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரத்தினம்(செல்வம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கந்தராசா(காந்தன்), சிவச்செல்வி(செல்வி), பொன்வாசன், அருள்மொழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவதனி, கருணாகரன்(வண்ணம்), கோமதி, சிவசத்தியசீலன்(சீலன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுசரத்தினம்மா, காலஞ்சென்ற மகாதேவா, காலஞ்சென்ற தங்கரத்தினம் அன்னலக்சுமி, மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனகன், ஆரணியா, லதுஜா, பொன்தீபிகா, பொன்தேனுகா, செங்கோன், அனிசா, லனுசா, அனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் NOVEMBER 10 சனிக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்,
மறுநாள் NOV11 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல்- 9.30 மணிவரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,
அதேநாள் காலை 9.30 மணி முதல் —11.30 மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு
12492 Woodbine Ave,GORMLEY ல் அமைந்துள்ள Highland Hillsல்
12.00- 12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
கருணாகரன்(வண்ணம்) -4168578822
சிவச்செல்வி(மகள்) – 6479972843
சிவசத்தியசீலன்(மருமகன்) — 6472998030