யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னர் இருந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் காலம் நிறைவடைந்த நிலையிலேயே புதிய ஒன்றியம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் போது முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த ஆர். ரமேஸ் தலைவராகவும், கலைப்பீடத்தைச் சேர்ந்த எஸ்.கபில்ராஜ் செயலாளராகவும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த கே. கௌரிதரன் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கிருஸ்ணமேனன் தலைமையிலான முன்னாள் மாணவர் ஒன்றியத்தினர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவ ஒன்றியத்திடம் சகல பொறுப்புக்களையும் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கமைய புதிய மாணவர் ஒன்றியத்தின் முதலாவது செயற்பாடாக மழை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்குவதற்கான செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர்.