மனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட முதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்றாகும்.
இதனை முன்னிட்டு, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரித்தானியா canada உள்ளிட்ட நாடுகளில் சர்வதேச ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், பாரிஸில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் canada prime ministerஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதேநேரம், 1914 ஜூலை மாதம் 28 ஆம் திகதியிலிருந்து – 1918 நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதி, முதலாம் உலகப்போர் இடம்பெற்ற காலப்பகுதியாக வரலாற்றில் பதிவாகின்றது.
முதலாம் உலகப் போரின் பிரதான காய்நகர்த்திகளான அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், இன்றைய வல்லரசுகளாய் தம் நாட்டை உருவாக்குவதற்கு அன்றைய இந்த யுத்தம் துணை செய்தது என்றால் அது நிதர்சனம்.